இரத்தினபுரி, பெல்மடுல்ல வீதியின் ரில்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முந்தினம் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார பணியகத்தில் பணியாற்றும் 29 வயதுடைய உத்பலா செவ்வந்தி என்ற இரட்டை பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வெளிவிவகார பணியகத்தின் ஊடக பிரிவின் செய்தி வாசிப்பாளராக இவர் செயற்பட்டுள்ளார்.
உயிரிழக்கும் போது கொரியா தொழில் இணைக்கும் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவருக்கு மேலதிகமாக இரட்டை குழந்தைகள், கணவர் மற்றும் தந்தை ஆகியோர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.
விபத்தில் ஏனையவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது