தம்மை நாட்டின் பிரதமராக நியமித்து தனது அரசியல் வாழ்க்கையை அழிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டம் தீட்டியதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச தன்னை பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்ததாக சஜித் பிரேமதாச செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
மக்களுக்காகவோ அல்லது நாட்டின் நலனுக்காகவோ அவர் தம்மை பதவியில் இருந்து கோரவில்லை. மாறாக, பொதுஜன பெரமுன நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டிருந்த நிலையில், தாம் பிரதமராக பதவியேற்ற பிறகு, தமக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்பதை தாம் அறிந்துக்கொண்டதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார். இதன் காரணமாகவே தாம் பிரதமர் பதவியை ஏற்கவில்லை என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
ராஜபக்சவின் முக்கிய பாதுகாவலரான தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவாக 134 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகளை கொண்டு, பதவியேற்ற சில வாரங்களுக்குப் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, தமது அரசியல் வாழ்க்கையை சீரழிக்க, கோட்டாபய தரப்பு திட்டமிட்டதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.