தனது பிரியாவிடை நிகழ்வில் நடந்த சில சம்பவங்கள் காரணமாக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர (P.B. Jayasundera) கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் வருவார்கள் என ஜயசுந்தர எதிர்பார்த்துள்ளார்.
எனினும் அவர்கள் எவரும் வரவில்லை என்ற காரணத்தினால், அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் ஓய்வு பெற்ற பின்னர் அமைதியாக, ஓய்வு வாழ்க்கையை முன்னெடுக்க ஜயசுந்தர ஏற்கனவே எடுத்திருந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறான நிலைமையின் கீழ் அவர் அவ்வப்போது ஊடகங்களுக்கு முன்னால் தோற்றி கடந்த கால இரகசியங்களை வெளியிட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.