இயற்கையாக கிடைக்கும் தேனில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் நாம் பலவித ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
காயங்களை குணப்படுத்தும் மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் திறன் தேனில் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதய ஆரோக்கியம்
தேன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும் என்று பல்கலைக்கழகம் ஒன்று செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
அத்தோடு இது உயர் ரத்த அழுத்தம், எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்புகளை குறைப்பதும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தேனில் செயற்கையான நிறமிகள் எதுவுமில்லை, குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருந்தால் அதனை சரிசெய்ய மாத்திரை, மருந்துகளை பயன்படுத்துவதை விடவும் தேன் கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும்.
உயர் ரத்த அழுத்தம் குறையும்
மலர்களிலுள்ள திரவத்தை எடுத்து தான் தேனீக்கள் தேனாக சேமித்து வைக்கிறது.தினமும் இரண்டு தேக்கரண்டி அளவு தேன் சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் குறையும் மற்றும் கெட்ட கொலஸ்டரால் அளவு கம்மியாகி நல்ல கொலஸ்ட்ரால் உற்பத்திக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேனில் இயர்கையாகவே 80 சதவிகிதம் சர்க்கரை இருக்கிறது. இது அரிதான சர்க்கரைகள், புரதங்கள், கரிம அமிலங்கள் போன்ற பல கலவைகள் சேர்ந்ததாகும்.சர்க்கரை சிரப் அல்லது வேறு இனிப்புகளுக்கு மாற்றாக தேனை உட்கொள்வது பல நன்மைகளை அளிக்கும்.
பதப்படுத்தப்பட்ட தேன் பாஸ்டுரைசேஷனுக்குப் பிறகு அதன் பல ஆரோக்கிய விளைவுகளை இழக்கிறது என்பது கணடறியப்பட்டுள்ளது.செயற்கையான நிறமிகள் எதுவும் சேர்க்கப்படாமல் பதப்படுத்தப்படாத தேன் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஒரு நாளில் 35-45 கிராம் பதப்படுத்தப்படாத தேனை உட்கொள்வது சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.