உடல் நலக்குறைவு காரணமாக காலமான இயக்குனர் எஸ்பிஜனநாதனின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் விஜய் சேதுபதி கண்கலங்கியபடி மலர்தூவிக் கொண்டே சென்றிருக்கிறார்
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்பிஜனநாதன்
இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி இருக்கிறார் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது
இப்படத்தின் எடிட்டிங் பணியின் போது வீட்டுக்கு சென்ற எஸ்பிஜனநாதன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் காலமானார்
இந்நிலையில் விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, கண்கலங்கிய படி மலர்தூவிக் கொண்டே சென்றார் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது