இன்றைய வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. எடையைக் கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர்.
உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் ஜிம்மில் பல மணிநேரம் பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள்.
ஆனால் இந்த முயற்சிகளாலும் பலருக்கு பெரிய அளவில் எந்த பலனும் கிடைப்பதில்லை.
எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மற்றும் இயற்கையான வழிகள் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
இதனை முறையாக உணவில் சேர்த்துக் கொண்டால் அதன் பலன்கள் குறுகிய காலத்தில் தெரியும்.
கொண்டைக்கடலையின் நன்மைகள் மற்றும் உடல் எடையை குறைப்பதில் அது எப்படி உதவும் என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கொண்டைக்கடலை சத்து நிறைந்தது
28 கிராம் கொண்டைக்கடலையில் சுமார் 102 கலோரிகள் உள்ளன. அதாவது 28 கிராம் கொண்டைக்கடலையை சாப்பிட்டால் 102 கலோரி சக்தி கிடைக்கிறது.
ஒரு கப் கொண்டைக்கடலை சாப்பிட்டால் தினசரி தேவைக்கு ஏற்ப சுமார் 40 சதவீதம் நார்ச்சத்து 70 சதவீதம் ஃபோலேட் மற்றும் 22 சதவீதம் இரும்புச்சத்து கிடைக்கிறது.
நம் உடல் கொண்டைக்கடலையை மெதுவாக ஜீரணிக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி விரைவாக பசி எடுக்காது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையும் தடுக்கலாம்.
எடை இழப்புக்கு உதவும்
கொண்டைக்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தும் அதிகமாக உள்ளன. கொண்டைக்கடலையை உணவில் சேர்த்துக் கொண்டால், அது உடல் எடையை 25 சதவீதம் குறைக்க உதவியதாக சமீபத்தில் வெளியான சர்வே ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
கொண்டைக்கடலை: பக்க விளைவுகள்
கொண்டைக்கடலை புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. கொண்டைக்கடலை உடலில் உள்ள அத்தியாவசிய புரதச் சத்து குறைபாட்டை மிக விரைவாக குறைக்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு இதை தினமும் சாப்பிடுவது ஆரோக்கியத்தை கெடுக்கும்.
இதை தினமும் சாப்பிடுவதால் நார்ச்சத்து அல்லது புரதச்சத்து அதிகரித்தால் வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
கொண்டைக்கடலை சாப்பிட சரியான நேரம்
கொண்டைக்கடலையை பொதுவாக ஆரோக்கியமான காலை உணவாக உண்ணலாம்.
இரவு உணவு சாப்பிட்ட பிறகு திடீரென பசி எடுத்தாலும் சாப்பிடலாம். கொண்டைக்கடலையை உணவில் பல வழிகளில் சேர்த்துக்கொள்ளலாம்