மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு வேலைக்கு இரண்டு வேளையாக செய்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில விஷயங்களை மறந்து விட வாய்ப்புகள் உண்டு. எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் அதை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனமுடன் இருங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகிப்பு தன்மை அதிகம் தேவைப்படும் நாளாக இருக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அக்கம் பக்கத்தினரும் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய விஷயங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை சாதுரியமாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளிக்க ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் நல்ல பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் மூலம் ஏற்றம் காண்பீர்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் மன அழுத்தத்தை கொடுக்கும் வகையில் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை எதிர்த்து வந்தவர்கள் வந்த வழியே சென்று விடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வழிகளை பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். கூட்டு தொழில் புரியும் பெண்களுக்கு புரிபவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். புதிய தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய சிந்தனைகள் மூலம் மன அமைதி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் கைகூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள். நீங்கள் நினைக்கும் காரியம் ஒன்று நினைத்த நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலமாக நல்ல பலன் உண்டாகும். ஆரோக்கியம் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவி சேர்ந்து இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு பெருகும். வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்யம் சீராகும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலமான பலன்களை அடையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதில் சாதக பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொலை தூர இடங்களில் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய திறமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை துளிர்விடும். பணியாளர்கள் மூலம் சில விஷயங்களை கற்று தேர்வீர்கள். ஆரோக்கியம் கவனம் தேவை.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீ எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். நீண்டநாள் நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு இன்று மனதில் சோர்வு உண்டாகும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆத்திரத்தை கட்டுப் படுத்தி அறிவுபூர்வமாக சிந்திப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கான காலம் வரும் வரை பொறுமையாகக் காத்திருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் படிப்படியாக மாறும். ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது.