இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பலர் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதை கட்டுப்படுத்த கட்டாயமாக உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம்.
புரதம்
அன்றாட உணவில் புரதத்துக்கு அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. பெண்கள் முதல் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வரை அனைவரின் உணவிலும் புரதத்தின் அளவை அதிகரிப்பது நல்லது.
புரதம் உடலுக்கு பலம் கொடுத்து பலவீனத்தை நீக்குகிறது. இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே, தினசரி புரதத்தை சரியான அளவு உட்கொள்வது முக்கியமாகும்.
அதே சமயம் உடல் பருமனை தவிர்க்கவும், உடல் எடையை குறைக்கவும் தினமும் புரதத்தை சரியான அளவில் உட்கொள்வது அவசியம்.
அதிக புரத உணவுகள் என்று வரும்போதெல்லாம் இறைச்சி, கோழி அல்லது மீன் அல்லது ராஜ்மா சோயாபீன் போன்ற அசைவ உணவுகள் நினைவுக்கு வருகின்றது.
தயிர்
கெட்டி தயிர் புரதத்தின் இயற்கையான மற்றும் நல்ல மூலமாகும் ஒரு கப் (சுமார் 200 கிராம்) கெட்டி தயிரில் 20 கிராம் வரை புரதம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல், தயிரில் கொழுப்பு மற்றும் இயற்கையான சர்க்கரையும் குறைவாக உள்ளது இதனால் உடல் ஆரோக்கியமாகவும் மெலிதாகவும் இருக்க இது உதவும்.
உலர் பழங்கள்
உலர் பழங்கள் மற்றும் வால்நட்ஸ், பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா போன்ற நட்ஸ்கள் மக்களின் அன்றாட உணவின் ஒரு பகுதியாகும்.
ஆனால் அவற்றை உட்கொள்வது உடல் எடையை குறைக்க வழிவகுக்கும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருப்பதைத் தவிர, உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களில் நார்ச்சத்தும் உள்ளது.
எடை இழப்பு
உலர்ந்த பழங்களை சாப்பிடுவதன் மூலமும் உடலுக்கு புரதம் கிடைக்கிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்புக்கு உதவுகிறது
தசைகளுக்கு பலம் தரும் பல வகையான அமினோ அமிலங்கள் இதில் காணப்படுகின்றன.
இது எலும்பு வலிமையை அதிகரிக்கிறது, திசுக்களை புதுப்பிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இது உடலுக்கு வலிமையையும் தருகிறது. உணவியல் நிபுணரின் ஆலோசனையின்படி இந்த புரதத்தைத் தேர்ந்தெடுக்கவும்.