இந்தியாவில் இருந்து அரசு மூலம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதா? அல்லது தனியார் மூலம் இறக்குமதியா? என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (2024.04.17) இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு 10,000 மெட்ரிக் டன் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில், நாட்டிலும் பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் இந்திய வெங்காயத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.