பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை கையளித்துவிட்டு, அதற்கு பதிலாக இந்த அரசு டொலர்களைக் கோரியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் , அவரால் சுயமாக சிந்தித்து செயற்பட முடியவில்லை எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில் ஜனாதிபதி செயலாளர் பதவியை மாற்றினால் சரியா? பிரச்சினைகள் தீருமா? பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய ஒருவரை புதிய செயலாளராக நியமிப்பதன்மூலம் நெருக்கடி தீர்ந்துவிடுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதனால் மக்களுக்கு கடும் நெருக்கடியில் சிக்கி உணவின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
அதேவேளை ஊழல், மோசடிகளும், முறையற்ற அபிவிருத்திகளும் நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு காரணம் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் டொலரை வழங்குமாறு அவரிடமும் இந்த அரசு கோரியிருக்கும் என கூறிய அவர், அதற்கு பதிலீடாக வடக்கு, கிழக்கு கையளித்திருக்கும் என தெரிவித்ததுடன், ஏனெனில் இன்று நாட்டிலுள்ள பெறுமதியான வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்க்பட்டுவருகின்றதாகவும் கூறினார்.

