லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (2024.05.03) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதன் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, 12.5 கிலோ லிட்டர் எல்பிஜியின் விலை 175 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதன் புதிய விலை ரூ.3,940 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.