இன்று செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள நிலையில் மூன்று ராசிகள் அதிஸ்டம் பெறவுள்ளனர்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரன் கும்ப ராசியில் நுழைந்தார். இந்நிலையில் மார்ச் 15 ஆம் திகதியான இன்று செவ்வாய் கும்ப ராசிக்குள் நுழைகிறார்.
இதனால் கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையால் 10 ஆண்டுகளுக்கு பின் ஒரு மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த சுப யோகமானது மார்ச் 25 ஹோலி பண்டிகை அன்றும் நீடித்திருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல ஆதாயம் கிடைக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் ….
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பிள்ளைகளால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும்.
நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வங்கி இருப்பு எதிர்பாராத அளவில் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். மேலும் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். புதிய திட்டத்தில் முதலீடு செய்ய நினைத்தால், அதிலிருந்தும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
கூட்டு தொழில் தொடங்க நினைத்தால் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவராக இருந்தால், நல்ல வரன் தேடி வரும்.