பிரித்தானியாவில் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸ் எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவில் நாய் திருட்டுகள் அதிகரித்திருப்பதாகவும், அதனால் மக்களுக்கும் பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தங்கள் விலை உயர்ந்த செல்லப் பிராணிகளின் புகைப்படங்களை வெளியிடும் பயனர்கள், பெரும்பாலும் தளத்தில் தங்களுக்கான privacy settings-ஐ சரியாக அமைப்பதில்லை, கூடுதலாக Tags பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் பயனர்களின் இருப்பிடம் திருடர்களுக்கும், திருட முயற்சிப்பவர்களுக்கும் சுலபமாகிவிடுகிறது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் துப்பாக்கி முனையில் பாப்ஸ்டார் Lady Gaga-வின் Koji மற்றும் Gustav எனும் இரண்டு French bulldog வகை நாய்கள் திருடப்பட்ட சமத்துவத்துக்குப் பிறகு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2019-ல் நாய் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை 172 -ஆக இருந்ததாகவும், 2020-ல் 465 நாய்கல் திருட்டுபோனதாக பதிவாகியுள்ளதாகவும், திருடப்பட்ட நாய்களைக் கண்டுபிடிக்க உதவும் பிரித்தன்யாவின் தொண்டு நிறுவனமான Doglost தெரிவித்துள்ளது.
உரடங்கில் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் ஒரு நாயை செல்லப் பிராணியாக அறிமுகப்படுத்த இதுவே சிறந்த தருணம் என்று நிறைய பேர் நினைத்தார்கள். அதனால், நாய்க்குட்டியின் தேவை மிகவும் உயர்ந்தது, பலரும் பின்னணியை விசாரிக்காமல் ஆன்லைனில் வாங்க தொடங்கினர்.
இந்த நிலையில், இந்த நாய்கள் எவ்வளவு விலை உயர்ந்தவை என்று சிலருக்கு தெரியவந்தது போது, அவை எவ்வளவு மதிப்புமிக்க ஒரு பொருள் என்பதை உணர்ந்த மக்களால் நாய் திருட்டுக்கள் அதிகரித்தன என்று DogLost கூறியுள்ளது.