இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு பின்னர் கலந்துரையாட வருமாறு, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று ஆரம்பமான 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது சபையில் உரையாற்றிய ஜனாதிபதி, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்றிணைந்து செயற்பட விரும்புகிறீர்களா என பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வரவு செலவுத் திட்ட அமர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் கூட்டத்தை கூட்டுமாறு பதிலளித்துள்ளார்.
இதற்கு அமைய, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று கூடுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும்