இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியினுள் மின்னல் தாக்கங்களினால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மின்னல் தாக்கங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்த நிலையில், அதில் நான்கு உயிரிழப்புக்கள் இந்த மாதத்தில் பதிவாகியுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.