பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை பண்புகளில் ஆதிக்கம் செலுத்தும்.
அதே போன்று எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அதிக ஆளும் தன்மை அதாவது சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டிருப்பார்கள்.
அப்படி பிறப்பிலேயே தலைத்துவ பண்புகளுடன் பிறப்பெடுத்தவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் எப்படியிருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒருவரின் பிறந்த திகதியை அடிப்பமையாக வைத்தே அவர்களுக்கான பிறப்பு எண்கள் கண்டறியப்படுகின்றது. உதாரணமாக, ஒருவரின் பிறந்த திகதி 25 ஆக இருந்தால் அவரின் பிறந்தநாளின் கூட்டுத்தொகை 7 ஆகும். இதுவே இவரின் பிறப்பு எண் ஆக கருதப்படுகின்றது.

