ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை உடல் பருமனுக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்
உடல் எடையை குறைக்க சில காய்கறிகள் உதவுவதோடு உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. அவ்வாறான காய்கறிகள் என்னவென நாம் இங்கு பார்ப்போம்.
பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.
பசலைக் கீரை குறைந்த கலோரி கொண்ட சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
முட்டைகோசில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதை உட்கொள்வது நீண்ட நேரம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. முட்டைக்கோஸ் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கார்பன் உணவாக உள்ளதாக உணவுமுறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இது எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.
இதில் போதுமான அளவு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே உள்ளன. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது தவிர, ப்ரோக்கோலியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. இதனால் எடையை எளிதில் குறைக்க முடிகிறது.
சீமை சுரைக்காயில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி6 கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றது.