பொதுவாக மனிதர்கள் என்றால் அவர்களுக்கு உடம்பில் எங்கயாவது ஒரு இடத்தில் மச்சம் என்பது இருக்கும்.
உடலில் மச்சம் வருவதற்கான காரணம் செல்கள் ஒரு கொத்தாக வளர்ந்து தோல் முழுவதும் பரவாமல் ஒரு இடத்தில் குவிந்திருப்பதுதான். இது மச்சம் என்று அறிவியல் பூர்வமாகக் கூறப்படுகிறது.
எனினும் இதற்கு ஜோதிடம் மூலமாகவும் சில நம்பிக்கைகள் உள்ளன. அந்த வகையில் உடலில் எங்கெங்கே மச்சம் இருந்தால் அவர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மச்ச சாஸ்திரம்
1.நெற்றியில் மச்சம் இருப்பவர்கள் செழிப்பின் அடையாளமாக கருதப்படுவார்கள். இது நெற்றியின் நடுவே இருந்தால் அது மிகுந்த ஞானத்தை குறிக்கும்.
இந்த மச்சம் வலது பக்கமாக இருந்தால் நீங்கள் பிஸினஸில் அல்லது திருமண வாழ்க்கையில் ஒரு சிறந்த துணையுடன் இருப்பீர்கள். இதுவே இடது புறத்தில் இருந்தால் அதிஷ்டம் எளிதில் வராது.
2.உதடுகளின் மேலே மச்சம் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். இது வலது அல்லது இடது மூலை பக்கத்தில் இருந்தால் நீங்கள் ஒரு சிறந்த உணவு பழக்கத்தை உடையவர்.
இது உதடுகளில் இருந்தால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உதடுகளுக்கு கீழே இருந்தால் நடிப்பு துறையில் ஆர்வம் இருக்கும்.
3. உங்கள் தாடையில் மச்சம் இருந்தால் நீங்கள் பாசமானவர்கள். பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பீர்கள். வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் ராஜதந்திர தன்மையைக் குறிக்கும்.
இடது பக்கத்தில் இருந்தால் அவர்கள் எதையும் நேரடியாக அணுகக்கூடியவராக இருப்பார்கள்.
4.உங்கள் கன்னத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் நேர்மையானவர்கள். பொருள் மற்றும் இன்பத்தை பற்றி கவலைபட மாட்டீர்கள். வலது பக்கத்தில் இருந்தால் குடும்ப பொறுப்பு கொண்டவராக இருப்பார்கள்.
இடது புறத்தில் இருந்தால் உள்முக சிந்தனையாளராகவும், கொஞ்சம் திமிர்பிடித்தவராகவும் இருக்கலாம்.
5.உங்களுக்கு தொப்புள் பகுதியில் மிக நெருக்கமாக மச்சம் இருந்தால் எப்பவும் நல்லது கிட்டும் என சீன ஜோதிடம் கூறுகிறது.
இது வலது பக்கத்தில் இருந்தால் பெண்களின் நிதியில் உயர்ந்தவர்களாக வாழ நினைப்பார்கள். இடதுபுறத்தில் இருந்தால் பொறாமை குணம் கொண்டவர்களாக இருக்கலாம்.
6.மச்சம் மூக்கில் இருந்தால் சுய மரியாதையுடன் வாழ்வாா்கள். கடின உழைப்பாளியாக காணப்படுவார்கள். மச்சம் மூக்கின் நுனியில் இருந்தால், அவர் மிகவும் குறுகிய மனநிலையுள்ளவர் இது வலது பக்கத்தில் இருந்தால் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள்.
இடது பக்கத்தில் இருந்தால் போராளியாக இருக்கலாம்.