இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட லேடரல் புளோ சோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து ரவிசாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் படேல் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்ததை அடுத்து இன்றைய 4 வது நாள் ஆட்டதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் 4 ஆவது போட்டி நடைபெற்று வருகிறது.