பருத்தித்துறை நீதிமன்றம், இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை மீனவர்கள் சுற்றிவளைத்துள்ளனர். பருத்தித்துறை மீனவர்களிடம் இருந்து இந்திய மீனவர்களை கடற்படையினர் மீட்டு கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
மேலும் 21 மீனவர்களையும் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 21 மீனவர்களுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதவான் 10 வருடங்களுக்கு ஒத்திவைத்தார்