இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் கொள்வனவுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் நோக்கத்துடன் இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திறைசேரியின் அதிகாரி ஒருவர் கோடிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய எரிபொருள் விநியோகம் முடிந்த பின்னரும் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தை தொடர்ந்தும் பராமரிப்பதை உறுதி செய்வதற்காக இந்த இரு நாடுகளிடமிருந்தும் தலா 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற முயற்சிப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியாவிடமிருந்து பெற்ற டொலர்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை கொள்முதல் செய்ய வெளியுறவு அமைச்சகம் மூலம் திறைசேரி விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.