சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட RMB 500 மில்லியன் (76 மில்லியன் அமெரிக்க டொலர்) மானியத்தின் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் உள்ளுர் அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இலங்கைக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை வழங்க பிரதமர் லீ கெகியாங் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை நிதியாவில் இருந்து கிடைத்த நிவாரணப் பொதிகள் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது