இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சரியான உணவுப் பொருட்களை உட்கொள்வதோடு, அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். அதுமட்டுமின்றி, தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் இஞ்சி, பூண்டு, எலுமிச்சை கலந்த நீரைக் குடித்து வருவதன் மூலமும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். மேலும் இந்நீரைக் குடித்தால், வேறு சில உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.
5 எலுமிச்சை, சிறிது பூண்டு மற்றும் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவைகளை துண்டுகளாக்கிக் கொண்டு, 2 லிட்டர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நீர் நன்கு கொதிக்கும் போது, அதனை வடிகட்டி சேகரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
நீரைக் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவு சீராகும். இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவு சீரானால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கும்.
இந்நீரை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற்றப்பட்டு, அடிக்கடி சளி, இருமல் போன்றவை வருவது தடுக்கப்படும்.
இதயத் தமனிகளில் அடைப்பு ஏதேனும் இருந்தால், அதனை இந்த தண்ணீர் சரிசெய்யும். மேலும் இந்த கலவையை தினமும் குடித்து வந்தால், இரத்த நாளங்களில் இருக்கும் வேறு சில பிரச்சனைகளும் நீங்கும்.
தினமும் காலையில் இந்நீரை ஒரு டம்ளர் குடித்து வந்தால், இதுவரை உடல் சோர்வை சந்தித்த நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம்.
முக்கியமாக இந்நீர் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும். எனவே தினமும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடித்து உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
இந்நீரில் உடலின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்தும் பொருள் நிறைந்திருப்பதோடு, இதனை அன்றாடம் குடித்தால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.