சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
- படத்தை பார்க்கும் பொழுது முதலில் குதிரை இருப்பது போன்று உங்கள் கண்களுக்கு தெரிந்தால் நீங்கள் மற்றவர்களை விட அன்பானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் இருப்பீர்கள்.
- உங்களின் முயற்சிகள் அனைத்தும் விரைவில் பலனளிக்கும்.
- தன்னம்பிக்கை கொண்டவராக இருக்கும் நீங்கள் எல்லா இடங்களிலும் பாராட்டப்படுவீர்கள்.
- உங்களின் தொழில் மற்றும் உறவுகளில் உண்மையை வெளிப்படுத்தும் நபராக இருப்பீர்கள்.
- பொழுதுபோக்குகள் விடயங்களில் அதிகமான ஆர்வம் காட்டுவீர்கள்.
- முதலில் படத்தை பார்க்கும் பொழுது முதலில் தவளை இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் நேர்மறையான எண்ணங்கள் கொண்டவராக இருப்பீர்கள்.
- வெளியில் பார்ப்பதற்கு புத்திசாலிகளாக இருப்பீர்கள்.
- எப்போதும் உங்களின் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் நபராக இருப்பீர்கள்.
- கடந்த கால சூழ்நிலைகள் குறித்து அதிகமான சிந்தனை உங்களிடம் இருக்கும்.
- அனுபவங்களில் சில எதிர்மறைகள் இருப்பதால் உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க விரும்புவீர்கள்.