பிரண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பலன்கள் பற்றிய நாம் இங்கு பார்ப்போம்.
இந்த பிரண்டையில் பல்வேறு உணவுகளை செய்து சாப்பிடலாம். பிரண்டை உடலைத் தேற்றும். பசியை தூண்டிவிடும். பிரண்டையை துவையலாக சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் இருக்கும் இடமே தெரியாது.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வயிற்றில் இருக்கும பூச்சிகளை கட்டுப்படுத்தும். உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
இயற்கை மூலிகைகள் ஏராளம் உண்டு. அத்தகைய அற்புதமான மூலிகைகளில் ஒன்று பிரண்டை. இது கொடி போல் வளரும், இதில் இலைகள் இருக்கும். நாம் இதன் தண்டுகளை சாப்பிடுவோம்.
மூளை நரம்புகள்
ஞாபக சக்தி பெருகும். மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டை துவையலை குழந்தைகள் சாப்பிட்டால் எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகளும் விரைந்து கூடிவிடும்.
மாதவிடாய் பிரச்சினைகள் சீராகும்
பிரண்டையை சாறு எடுத்து 6 டீஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வர வேண்டும். இதனால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் சீராகும்.
உடல்நலம் அதிகரிக்கும்
வாரத்திற்கு இரு முறை சாப்பிட்டு வர உடல்நலம் அதிகரிக்கும். கழுத்தை அசைத்தால் வலி ஏற்படும் நபர்களுக்கு இந்த பிரண்டை வரப்பிரசாதம்.
கபம் பித்தத்தை கட்டுப்படுத்தும்
வாதம் , கபத்தை கட்டுப்படுத்தும். பித்தத்தை அதிகப்படுத்தும் குணம் உண்டு. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் இந்த பிரண்டையை தவிர்ப்பது நல்லது.
ரத்த ஓட்டத்தை சீராக்கும்
அஜீரண மண்டலத்தை சரி செய்யும். இதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, முதுகு வலியை நீக்கும்.
உடல் எடை குறைக்கும்
சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட்டு வர நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது இந்த பிரண்டையை சாப்பிடலாம். பிரண்டையை உடல் எடை குறைக்க பயன்படுத்துகிறார்கள்
உடல் எடையை மட்டும் குறைக்காமல் கெட்ட கொழுப்பையும் குறைக்கும். மூட்டு வலியை குணமாக்கும். வாய் புண்களை ஆற்றும் குணம் இந்த பிரண்டைக்கு உள்ளது