ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு பல்வேறு கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் அச்சட்டங்களை மீறுவர்கள் மீது கடுமையான தண்டனைகளையும் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுமார் 72 கிலோ மீற்றருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள், நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்வதற்கு தலிபான்கள் தடைவித்துள்ளனர்.
மேலும், அவ்வாறு பயணம் செய்யும் பெண்கள், கண்டிப்பாக முறையாக ஹிஜாப் அணிய வேண்டும் எனவும், ஹிஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது எனவும், பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

