இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டி பிரவுன். 32 வயதான இவருக்கு இருக்கும் பிரச்சனை என்பது சற்று வித்தியாசமானது.
அவர் ஒரு வகையான அபூர்வ மூளை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி எந்த உணர்ச்சியானாலும், அது கோபமோ, சிரிப்போ, பயமோ அல்லது கவர்ச்சியாக இருந்தால் கூட உடனே மயங்கி விழுந்து விடுவார்.
குறிப்பாக கிறிஸ்டி வெளியே செல்லும் போது கவர்ச்சியான ஒரு ஆணை பார்க்கிறார் என்றால் அடுத்த நொடியே, அதே இடத்தில் அவர் மயங்கி விழும் விபரீதம் நடந்துள்ளது. இதன் காரணமாகவே கிறிஸ்டி வெளியே செல்வது இல்லையாம். மிகவும் அவசியம் என்ற காரணத்திற்காக வெளியே சென்றால், யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் தலையைக் குனிந்தவாறே தான் கிறிஸ்டி செல்வது வழக்கம்.
இதுகுறித்து பேசிய கிறிஸ்டி, ”இந்த பிரச்சனை எனக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கிறது. என்னால் மற்றவர்கள் போலச் சாதாரணமாக வெளியில் நடமாட முடியவில்லை. ஆனால் இந்த பிரச்சனையில் ஒரு நன்மையும் உள்ளது. யாராவது என்னிடம் சண்டை போட்டால், நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தவுடன் நான் மயங்கி விழுந்து விடுவேன். அந்த சண்டையும் நின்று விடும்” என கிறிஸ்டி வேடிக்கையாகக் கூறியுள்ளார்.