அரசாங்கம் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை வழங்கியதனால் அரச வருமானத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் உண்மை நிலைமைகளை மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை வழங்கியதனால் அரச வருமானம் வீழ்ச்சியடைந்தது.
எனினும் நாட்டின் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சியே பொறுப்பு என ஜனாதிபதியும், பிரதமரும் கூறி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.