வருந்தோறும் அமாவாசை வருகிறது. அந்த நாட்களில் நாம் கடவுள் வழிபாடு செய்வது வழக்கம். அப்படி செய்யும் போது பலரும் தங்களின் ஏதோ ஒரு வழிபாட்டிற்காக செய்வார்கள். அமாவாசை தினம் என்று கூறுகையில் ஆண்டு தோறும் வரும் அமாவாசைகள் மிகவும் முக்கியமான பிரசித்தி பெற்றவை.
அதில் ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவை. பொதுவாக வழக்கமாக வரும் அமாவாசைகளில் திதி, தர்ப்பணம் கொடுப்பார்கள் இது செய்ய வேண்டிய ஒரு கட்டாயமாகும்.
இதில் இந்த கடமைகளை செய்ய முடியாதவர்கள் ஆடி அமாவாசையில் செய்யலாம். இதை தொடர்ந்து ஆடி அமாவாசை அன்று எப்படி இந்த தோஷத்தை நீக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆடி அமாவாசையானது ஆடி மாதம் 19ஆம் தேதி ஆகஸ்ட் 4 அன்று வருகிறது. ஆடி அமாவாசை காலத்தில் சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் பயணிக்கின்றார். இந்த நேரத்தில் சந்திரன் ஆட்சி பெற்று விளங்குகிறார்.
இந் ஆடி அமாவாசை நாளில் புண்ணிய ஷேத்திரங்களாக விளங்கும் ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சமூத்திரக் கரைகளில் தர்பணம் செய்வது நன்மைகளை தரும். இந்த நாளில் கடல் பிரதேஷங்களில் தர்ப்பணம் செய்யலாம்.
இதனால் நாம் செய்யும் தர்ப்பணமானது முக்தி பெறும். கடல் பகுதிகளில் இல்லாதவர்கள் ஆறு உள்ளிட்ட நதிக்கரைகளிலும் தர்பணம் செய்வது சிறப்புகளை ஏற்படுத்தி தரும். பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாக விளங்குகின்றது.
இந்த பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் இழந்து இருந்தால் இந்த ஜாதகங்களின் சொந்தகாரர்களுக்கு நல்ல விஷயங்களான திருமணம், குழந்தை பேறு உள்ளிட்டவை தள்ளிப்போகலாம்.
இந்த தடைகளை தவிர்ப்பதற்கு எமக்கு மேல் ஆளுகின்ற பித்ருக்களின் ஆசிர்வாதம் மிக அவசியம் ஆகும். இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறும் என்பது நம்பிக்கை. இந்த நேரத்தில் குலதெய்வ வழிபாடும் மிகவும் முக்கியமாகும்.
இந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம். இதை தவிர எமது முன்னோர்களின்அறிவுரை படி தினத்தில் காகத்திற்கு படையல் போடுவதும் முன்னோர்களை மகிழ்ச்சியாக்குவதற்கு எளிய வழியாகும் என கூறப்படுகின்றது.
இப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு தேவையானது தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்ப கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெற்றவர்கள் என்ற மனதுடன் நிம்மதியான வாழ்கையை வாழலாம். எனவே ஆடி அமாவாசையின் போது தோஷத்தை இப்படியும் நீக்கலாம்.