அரசுடன் இருக்கும் ஒப்பந்தத்தின் காரணமாக போரட்டத்தை நிறைவு செய்ய அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் நடவடிக்கை எடுத்ததாக சுயாதீன ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இறுதி தீர்மானம் எடுக்காத நிலையில் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்தமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமருடன் கலந்துரையாடலை மேற்கொண்ட தினத்திற்கு மறு தினமே போராட்டத்தை கைவிட தீர்மானித்தாகவும் இதனை காட்டிக் கொடுப்பாகவே கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் ஏனைய கடமைகளில் ஈடுபடபோவதில்லை என ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
adstudio.cloud