” அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியம். அதனை அமுலாக்கும்போது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” தற்போதைய சூழ்நிலையில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதாலேயே அதற்கு எதிராக வாக்களித்தேன்.
அந்த சட்டம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம். ” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.