நடிகை ஒருவர் அழகிற்காக தனது மூக்கை அறுவை சிகிச்சை செய்து உள்ளார். அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்து உள்ளது.
சீனாவின் பிரபல நடிகை காவ் லியு (24 ). பல சீன திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார். பாடகர் மற்றும் நடிகையான அவர் தற்போது அழகிற்காக செய்து கொண்ட அறுவை சிகிச்சை அவரது வாழ்க்கையை பாதித்துள்ளது. அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததோடு அவரது மூக்கு இப்போது கருப்பு நிறத்தில் உள்ளது.
குவாங்சோ நகரில் உள்ள ஜி ஜி ஜி குவாங் கிளினிக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
காவ் லியு தனது சோகக் கதையை சீன சமூக ஊடகமான வெய்போவில் பகிர்ந்து கொண்டார். இது குறித்த தகவல்களை அளித்து தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரது மூக்கு அசிங்கமாகி விட்டது தனது வாழ்க்கை நரகமாக மாறத் தொடங்கி உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.
காவோவின் மூக்கின் முன் பகுதி கருப்பு நிறமாகிவிட்டது. அதன் திசுக்கள் சேதமடைந்துள்ளன. இப்போது மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று லியு கூறி உள்ளார்.
காவோ லியுவுக்கு வெய்போவில் 50 லட்சத்துக்கும் அதிகமான பலோவர்கள் உள்ளனர்.