முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, சுமார் 700 பேரை அழைத்து அவசரக் கூட்டமொன்றை நடாத்த உள்ளார். நாளைய தினம் மாலை அலரி மாளிகையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
அமைச்சர்கள், உறுப்பினர்கள், மாநகரசபை மற்றும் நகரசபையின் நகரபிதாக்கள், பிரதி நகரபிதாக்கள் மேயர்கள், பிரதி மேயர்கள், பிரதேச சபையின் தவிசாளர்கள் மற்றும் துணைத் தவிசாளர்கள் உள்ளிட்டவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சிக் காரியாயலத்தின் ஊடாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதிலும் அரசாங்கத்திற்குச் சார்பான பிரசாரங்களை மேற்கொள்வது குறித்த வியூகங்கள் இந்த கூட்டத்தில் வகுக்கப்படும் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவ்வாறான கூட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.