அலரி மாளிகையில் தற்போது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலரிமாளிகைக்கு முன்பாக கூடியிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக வேண்டாமென வலியுறுத்தி அலரி மாளிகையில் தற்போது பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது “காலிமுகத்திடலுக்குச் செல்ல இதுதான் நேரம்“ என போராட்டக்காரர்கள் கோசமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் கருத்து தெரிவித்த ஜோண்ஸ்டன் பெர்னாண்டோ,
பிரதமர் பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகுமென தெரிவித்துள்ளார். அத்துடன் “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகமாட்டார் .
போராட்டத்திற்கு தயாராகுங்கள். வெற்றியா, தோல்வியா என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம். பொறுத்தது போதும்” என்றும் அவர் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் எனவும், தான் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.