வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாளைய தினம் காலக்கெடு முடிவடையும் கடைசித் தறுவாயில், எம்.ஏ.சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கையடுத்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.