நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் மற்றும் குடும்பத்தினருக்கு மற்றொரு பேரிடியாக அவர்களது காணி பறிபோயுள்ளது.
பாரதிபுரம் கிராம அலுவலர் பிரிவில் இரணைமடு பகுதியில் உள்ள காணி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளரின் பெயருக்கு ஆனந்த சுதாகரின் குடும்பத்திற்கும் தெரியாது கைமாறியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அந்த உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் இருப்பாதாகவும், போலி ஆவணங்களை வைத்தும் போலி கையெழுத்துக்களையும் வைத்தே காணி உரிமத்தை தங்களிடம் இருந்து காணியை சுவீகரிப்பதாக ஆனந்த சுதாரகரின் சகோதரி தெரிவித்தார்.
முதலாளி வெளிநாட்டில் இருப்பதால், அவரது பணியாளர்கள் என குறிப்பிட்ட சிலரே காணிக்குள் வந்த வேலியடைக்க முயன்றனர். காணி உரித்து தொடர்பில் இதுவரை சுயாதீனமாக அறிந்து கொள்ள முடியவில்லை.
அந்த காணிக்குள் வைத்து தன்னை தாக்க முயற்சித்துள்ளதாகவும் ஆனந்த சுதாரகரனின் சகோதரி தெரிவித்தார்.
ஆனந்த சுதாகரின் விடுதலைக்காகத்தான் உதவி செய்ய முடியாது போகிறது என்றால் குறைந்த பட்சம் அவரது காணியையாவது மீட்டு அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக சகோதரியும் தாயாரும் வேண்டி நிற்கிறார்கள்.