நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம் மக்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பொதியை அறிவித்துள்ளது.
இந்த நிவாரணத்தை வழங்க எப்படி பணம் கிடைக்கும்?. பணத்தை அச்சிட நேரிடுமா?. நாட்டில் காணப்படும் பணவீக்கம் மேலும் அதிகரிக்குமா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
5 ஆயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை தமக்கு வழங்குமாறு சமூர்த்தி உதவி பெறுவோர் கூட கோரிக்கை விடுக்காத சந்தர்ப்பத்தில் அரசாங்கம் இந்த நிவாரணத்தை வழங்க முன்வந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் இந்த நிவாரணத்தை அரச ஊழியர்களுக்கு மாத்திரம் வழங்குவது மற்றுமொரு சிக்கலை உருவாக்கும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இப்படியான சூழ்நிலையில், தனியார் துறையின் தொழிற்சங்கங்கள் ஊதிய அதிகரிப்பை கோரி வீதியில் இறங்கும் ஆபத்தும் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.