அம்பாறையில் 76 கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலுஎல பகுதியில் விசேட சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 67 வயதுடைய தேவாலஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இங்கினியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.