சாரா ஜஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரனின் டிஎன்ஏ பரிசோதனைக்காக குண்டு வெடிப்பில் பலியானவர்களின் உடல்களை தோண்டி எடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கமைய அம்பாறை பொது மயானத்தில் இன்று காலை இப்பணி ஆரம்பமாகியுள்ளது.
கடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.