அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து அமைச்சுகளின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் என்பன திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

