அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சட்டவிரோதமான வருமானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியில் 75 மில்லியன் ரூபா வரை சட்டவிரோதமான முறையில் வருமானம் பெற்றமை மற்றும் சொத்து சேர்த்தமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விமல் வீரவன்சவை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி மன்றில் பிரசன்னமாகவில்லை.
சுகவீனம் காரணமாக அவர் மன்றிற்கு சமூகமளிக்காத நிலையில், இந்த வழக்கை எதிர்வரும் ஜுன் மாதம் 17ம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது சாட்சிகளையும் எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது