அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் வளர்ப்பு பாட்டி சாரா ஒபாமா தனது 99 வயதில் கென்யாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார்.
மாமா சாரா என பரவலாக அறியப்பட்ட இவர், ஜனாதிபதி ஒபாமா இஸ்லாமியர் எனவும் கென்யாவில் பிறந்தவர் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது, அதை கடுமையாக எதிர்த்தவராவார்.
ஒபாமாவின் தாத்தாவுக்கு மூன்றாவது தாரமான சாரா ஒபாமா, கென்யாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திங்கட்கிழமை மரணமடைந்துள்ளார்.
ஆனால் கொரோனா தொடர்பான எந்த பாதிப்பும் அவருக்கு இல்லை என அவரது மகள் உள்ளூர் ஊடகம் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2008ம் ஆண்டு பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் சாரா ஒபாமாவின் குடியிருப்பும் கிராமமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
மட்டுமின்றி, சாரா ஒபாமா கல்விக்காவும், ஏழை சிறார்களின் உணவுக்காகவும் பல தொண்டுகளை செய்துள்ளார்.
சாரா ஒபாமாவின் மறைவு நாட்டுக்கான பேரிழப்பு என கென்யா ஜனாதிபதி தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.