அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு, ஜெரோம் பவலை அமரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வீட்டு வசதி நிதி கண்காணிப்பு முகவரகத்தின் இயக்குனரான பில் புல்டி, சமூக வலைத்தளத்தில், ஜெரோம் பவலை விமர்சித்து பதிவிட்டார்.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்தை புதுப்பித்ததில் முறைகேடு நடந்ததாகவும், அதுகுறித்து பவலிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டார்.
அரசியலில் ஒருசார்பாக பவல் நடந்து கொண்டது குறித்தும் விசாரிக்க வேண்டுமென அவர் கூறினார்.
அதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில், தன் சமூகவலைதளத்தில் அமரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.