அமெரிக்க நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக, அந்நாட்டின் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெப்பத்தினால் ஆபிரகாம் லிங்கனின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலை பகுதி உருகி கீழே வளைந்துள்ளது.
இதேவேளை, மெழுகு சிலையின் சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் 16-வது குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர்.
அவரை பெருமைப்படுத்தும் வகையில் வாஷிங்டனில் தொடக்கப் பாடசாலை வளாகத்தில் 6-அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை வடிவகைப்பட்டு இருந்தது. அந்த சிலையே கடும் வெப்பம் காரணமாக உருகியுள்ளது.