ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீடு செல்ல வலிறுத்தி அமெரிக்காவின் லொஸ் எஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த சிங்கள நடிகை, பாடகி சஞ்சீவனி வீரசிங்க அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
நடிகை சஞ்சீவனி வீரசிங்க தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.
இதன்படி கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர்.
இந்த நிலையில் கோட்டா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அவர் வந்திருந்தார். எனினும், போராட்டக்காரர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்