அமெரிக்காவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா வர்ஜீனியாவில் உள்ள வொல்மாட் பல்பொருள் அங்காடியின் மேலாளரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் அந்த நிறுவனத்தில் சுமார் இருபது வருடங்களாக பணிபுரிபவர் என்று கூறப்படுகிறது.
பின்னர் குறித்த நபரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.