அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கனுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இராஜாங்கச் செயலாளருடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.