அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் (Jimmy Carter) மறைவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
சமாதானம்,மனித உரிமைகள் மனிதாபிமான விவகாரங்கள் குறித்த அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் அவரது அசாதாரண வாழ்க்கை வரையறுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
அதோடு சர்வதேச அமைதியை ஊக்குவிக்கும் ஜிம்மி கார்ட்டரின் (Jimmy Carter) முயற்சிகளை 2002ம் ஆண்டு அமைதிக்கான நோபால் பரிசை அவருக்கு வழங்கியதன் மூலம் உலகம் அங்கீகரித்தது என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
பாரம்பரியம் அனைவருக்கும் சிறந்த உலகை உருவாக்குவதற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்காக விளங்கட்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் (Jimmy Carter) தனது 100 ஆவது வயதில் காலமானார்.
ஜிம்மி கார்டர்(Jimmy Carter) அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியாக 1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்டர் பதவி வகித்தார். 100 வயதான அவர், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த முன்னாள் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்