அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங்க் வலையில் சிக்கி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தவறான முடிவுகளை எடுத்ததாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நேற்று (11) இடம்பெற்ற வட இலங்கை கூட்டமைப்பின் கேகாலை மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கோட்டாபய ராஜபக்ஷ செய்த பெரிய தவறு தான் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவரின் பேச்சுக்களை கேட்டு அதற்கு அடிமையாகி இருந்ததாக விமல் சாடினார்.
அமெரிக்க தூதுவர் ஜூலியா சங்க் கடந்த காலங்கள் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் சந்தித்து வந்ததாகவும் விமல் குறிப்பிட்டார். இந்த சந்திப்புக்களை யாரும் சொல்லமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோட்டாவுக்காக பிரார்த்தனை
மிரிஹான வீட்டினை போராட்டகாரர்கள் சுற்றிவளைத்த நாள் அன்று இரவு ஜூலி அம்மையார் மிரிஹான வீட்டிற்கு வநது , உங்களுக்கு இவ்வாறு நடந்ததையிட்டு நான் பெரிதும் வருந்துகிறேன்.
நீங்கள் ஒரு பௌத்தர், நான் கத்தோலிக்கர். எனது நம்பிக்கையின் கீழ் பிரார்த்தனை செய்ய எனக்கு இடமளியுங்கள் எனக் கூறி மண்டியிட்டு ஜூலியா அம்மையார் இறைவனிடம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரார்த்திக்கிறார் என்றும் விமல் கூறினார்.
இதனையடுத்து அடுத்த நாள் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் கூறுகிறார், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவரை பாருங்கள், நல்லவராக இருக்கிறார். இப்படிச் சம்பவம் ஒன்று நேற்று நடந்தது.. வீட்டிற்கு வந்து எனக்காக பிரார்த்தித்தார். யாரு இப்படிச் செய்வார்கள்? என அன்று ஆரம்பித்த காதல் தான் அடுத்த நாள், மறுநாள், அதற்கும் அடுத்த நாள் என இவ்வாறு தொடர்ந்ததாகவும் விமல்வீரங்ச சாடினார்.
IMF இற்கு செல்ல வேண்டாம்
எந்த தீர்மானங்கள் எடுத்தாலும் கோட்டாபய, ஜூலிசங்குடன் அதனை பரிமாறியதாக தெரிவித்த விமல் வீரவங்ச, IMF இற்கு செல்ல வேண்டாம் என அமரிக்க தூதுவரின் அறிவுறுத்தியதாகவும், அவரது பேச்சில் மயங்கியே கோட்டாபய அதனை செய்யாது விட்டதாகவும் குறிப்பிட்டார்.
அதோடு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் உள்ளவர்களை அகற்றவா போகிறீர்கள் எனக் கேட்கிறார்.. கோட்டாபய ஆம் என்று கூற உடனே அதனை செய்ய வேண்டாம்.
அப்படிச்செய்தால் IMF செயற்திட்டங்கள் வீணாகும் என அமெரிக்க தூதுவர் அறிவுறுத்தியதாக தெரிவித்த விமல் வீரவங்கச, அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் ஒரு பக்கம் நாட்டின் ஜனாதிபதியை ஆட்டிவைத்ததுடன் மறு பக்கம் ஆர்ப்பாட்டத்தினை ஆதரித்தார் என்றும் விமல் வீரவங்ச இதன்போது மேலும் தெரிவித்தார்.