அன்று முள்ளிவாய்கால் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்களை பல்வேறு நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்கி கஞ்சிக்காக மட்டுமே கையெந்த வைத்த ராஜபக்க்ஷர்கள், இன்று அதன் பலனை அனுபவிக்கின்றனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் எல்லாவற்றுக்கும் நாம் வரிசையில் நின்று வாங்கவேண்டிய அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அப்போது உள்நாட்டு போரினால் ஏற்பட்ட நிலையில் நாம் வரிசைகட்டி நிற்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டோம்.
அப்போது தமிழர் பிரதேசத்தில் மட்டுமே இந்த அவலநிலை ஏற்பட்டிருந்த நிலையில், தென்னிலங்கையரோ அல்லது ஆட்சியில் இருந்தவர்களோ அதைப்பற்றி சிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
ஆனால் இன்று காலம் அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் எனும் முது மொழி பொய்யில்லைப் போலும்.